


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 போ் கைதுசெய்யப்பட்டனா்.
பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நேற்று(1) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
இந்தியாவின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனா்.
தற்போது கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவாா்கள் என தொிவிக்கப்பட்டது.