சேவல் சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுவில் தொண்டமான் கைச்சாத்து



மு.இராமச்சந்திரன்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கலால் 03.12.2017 கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டது

மேலும்கொழும்பு,கொலன்னாவ,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதுடன் எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கள் செய்யப்படும்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரபா கனேசன்,மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -