ஒலுவிலின் ஒப்பாரி..........!

ஜே.வஹாப்தீன் -

ன்றுபட முடியாதா?
ஒன்றுபட்டு
வென்றுவிட முடியாதா?
அன்றுவிட்ட பிழைகளுக்குள் விழுந்து
இன்றும் அழுகி அவிதல் தேவையா?
குன்றுகள் முளைத்த கடலோரம்
கூடிக் கூடி கண்ணீர்க் கதை
இன்னும்
எத்தனை காலம்?

கடலுக்குப் பெரும் பசி
கதீசா மாமியின்
குடலுக்குள் மண்போட்டு
பாடுபட்டுச் செய்த
பன்காலையை விழுங்கிடுச்சி.
இனி
பொங்குமா மாமியின்
சோத்தடுப்பு?

கடுங்காத்து
கடல் கொந்தளிப்பு
மரணத்துக்கு அஞ்சாமல்
மக்கள் மனை காக்க
எரணத்துக்காய் தோணித்தள்ளும் எம்மூரான்
எத்தனை நாள் ஏங்குவது?

போன தலைவர்
போனதனால்
பொன்னன் வெளிக்கனவு புதைந்து போனதுபோல்
இந்தக் கடலோரக் கனவும்
இடிந்து அழிகிறதே.

நீ யார் என்று கேளாமல்
நான் யார் என்று வாழாமல்
நாம் கொண்ட துயர் நீங்க
நாலு குரல் ஓங்காதா?

கண்ணைத்திறந்து
மண்ணைக் காக்க வா.
அன்னை அழுகின்றாள்
அவலம் தீர்க்க வா.
உன்னைத்தேடிவரும் வாக்கு வேட்டைக்காரனிடம்
உரிமை கேட்க வா
உடமை மீட்க வா.

பஞ்சுமிட்டாய் சண்டை போதும்
கொஞ்சம்
வஞ்சம் நீங்கி
வருங்காலம் படைப்போம்
சுயநலம் உடைப்போம்.

நமது பிள்ளை அழுகின்றான்
நாளை அவன் வாழ நிலம் வேண்டும்.

ஒன்றுபட முடியாதா?
ஒன்றுபட்டு
வென்றுவிட முடியாதா?
இன்று யோசித்தால்
நாளை விடியாதா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -