எஸ் .எல். அப்துல் அஸீஸ்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட 'முனை மொட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மறைந்த எழுத்தாளரும், கவிஞரும், பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.பழீல்யின் 12வது வருட நினைவாக வெளியிடப்பட்ட இவ் நூல் வெளியீட்டு விழா, கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதி தலைமையில் இடம்பெற்றதுடன்
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக கவிஞர் சோலைக்கிளி, எழுத்தாளர் உமா வரதராஜன், கலைஞர் ஏ.ஏ.கபூர் உட்பட கவிஞர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.