கொழும்பு அமெரிக்க தூதரக ஊடக அறிக்கை-
இலங்கையில் எய்ட்ஸினை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கு அமெரிக்காவும், இலங்கையும் ஆரம்பித்துள்ள ரூபாய் 306,000,000 (2 மில்லியன் அமெ. டொலர்கள்) பெறுமதியான எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொழிநுட்ப உதவி பங்காளித்துவம்
2025ஆம் ஆண்டளவில் எய்ட்ஸை ஒழிப்பதற்கான அரசாங்க முயற்சிகளைத் துரிதப்படுத்துவதற்கான இரண்டு வருட எச்.ஐ. வி/எய்ட்ஸ் தொழிநுட்ப உதவி பங்காளித்துவம் ஒன்றினை டிசம்பர் 8ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் இணைந்து ஆரம்பித்தன.
இலங்கையில் எய்ட்ஸை ஒழிப்பதனை நோக்கிப் பங்களிப்பதற்கு தீர்வுகளை, புதிய தொழிநுட்ப திறன்களை மற்றும் புத்தாக்கங்களை பரிமாற்றுவதற்கு எய்ட்ஸ் நிவாரணத்திற்கான ஜனாதிபதி அவசர நிதியத்தின் ((PEPFAR) ஊடாக அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிறுவனமான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு உதவும்.
“இலங்கை அரசாங்கத்துடன் பல்வேறு சமூக, பொருளாதார திட்டங்களில் யூஎஸ்எயிட் இணைந்து செயற்படுகின்றது. எயிட்ஸை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இலங்கை முன்னகரும் வேளையில் இந்த
பங்காளித்துவம் மிகவும் முக்கியமானதாகும்” என யூ.எஸ். எயிட் இலங்கைக்கான இயக்குநர் கலாநிதி அன்ரு சிசன் தெரிவித்தார். “எச்.ஐ.வியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான
யூஎஸ்எயிட்- இலங்கையினது முக்கிய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து யூஎஸ்எயிட் இந்தியா மகிழ்ச்சியடைகின்றது. குறிப்பாக பிரதான மக்கள் தொகையினர் தொடர்பில் மகிழ்ச்சி கொள்கின்றது. இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகளவு சுகாதாரம் சார்ந்த ஓத்துழைப்புகளிற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என யூஎஸ்எயிட் இந்தியாவின் இயக்குநர் மாக் அன்டனி வைட் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, சுகாதார அமைச்சின் செயலாளர் திரு ஜனக்க சுகததாச அவர்கள், “எச்.ஐ.வி/எய்ட்ஸ் எனும் போது நாம் புதிய அணுகுமுறையைக் கொண்டிருக வேண்டும் சமூகம்சார் அணுகுமுறையுடன் இணைந்ததாக பொது சுகாதார அணுகுமுறை அமைதல் வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்கும், எச்.ஐ.வி வைரஸ் தொற்றுவதற்கான அதிகளவு பலவீனத் தன்மையைக் கொண்டுள்ளவர்களான ஆபத்திலுள்ள மக்கள் தொகைக்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சை சேவைகளுக்கு அணுகும் வசதியை மேம்படுத்துவதற்கும், தேசிய எஸ்.ரி.டீ/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி ((NSACP)
இலங்கை, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியம் (GFATM), மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் என நாட்டின் பிரதான பங்குதாரர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் யூ.எஸ்.எயிட்டின் இரண்டு வருட பங்காளித்துவம் முன்னெடுக்கப்படும்.
வேறுபட்ட பிரதான சனத்தொகை நட்புறவான சமூகம் மற்றும் சிகிச்சை நிலையம் சார் அணுகுமுறைகள் ஊடாக எச்.ஐ.வி சேவைகள் மற்றும் பிரத்தியே மருத்துவர்களை ஈடுபடுத்தில் புத்தாக்க தீர்வுகளின் ஊடாக எச்.ஐ.வி தடுத்தல் மற்றும் பரிசோதனை சேவைகளை மேம்படுத்தல், மற்றும் மறைந்துள்ள பிரதான மக்கள் தொகையை எட்டுவதற்கான அணுகுமுறைகள் பிரதான மக்கள் தொகை சார் விசேட உபாய நடத்தை மாற்ற தொலைத்தொடர்பு ஆவணங்கள் மற்றும் சமூக ஊடக தொடர்பாடல் உபாயம் ஒன்று என்பவற்றை வடிவமைக்கவும், முன்னெடுக்கவும் யூ.எஸ்.எயிட்டின் உதவி துணை புரியும்.
2030ஆம் ஆண்டளவில் எய்ட்ஸை ஒழிப்பதற்கான ஐ.நா வின் உலகளாவிய அர்பப்பணிப்பின் அடிப்படையில்
2025ஆம் ஆண்டளவில் எய்ட்ஸை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை அரசாங்கம்அர்ப்பணிப்புடன் உள்ளது.