உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையே 3ஆவது சுற்றுப் பேச்சு ஆரம்பம்



பாறுக் ஷிஹான்-

ள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று (5)மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் செயலாளர் ஆர்.துரைராஜசிங்கம் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிநேசன், சிவமோகன், துரைரட்ணசிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன்,
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் த.குருகுலராசா, பா.சத்தியலிங்கன், பசுபதிப்பிள்ளை, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரும்
புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண அமைச்சர் க.சிவநேசன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மோகன் மற்றும் ஆனந்தன் ஆகியோரும்
ரெலோ சார்பில் அதன் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -