பிரபாகரன் கல்வி கற்ற அம்பாறை த.ம.வித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிப்பு!

காரைதீவு நிருபர் சகா-

மிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக ஆவணங்கள் மூலம் அறியப்படும் அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது பயில்வதற்கு எந்த மாணவரும் இல்லை. ஆக ஒரு அதிபரும் ஓரு ஆசிரியரும் உள்ளனர்.

அம்பாறை நகர்ப்பகுதியில் விசாலமான காணியில் அமைந்துள்ள இப்பாடசாலையின் கட்டடங்கள் இராணுவம் மாணவர் படையணி இளைஞர்படையணி டிஈஓ அலுவலகம்
என்பவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆக பாடசாலை அதிபர் அலுவலகம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

கல்லோயா ஆற்றுப்பள்ளதாக்கு அபிவிருத்திச்சபையில் அப்போது பணியாற்றிய
தமிழ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்விகற்றுவந்தனர்.
1980களின்பின்னர் அங்கேற்பட்ட இனக்கலவரத்தின்பின்னர் அங்கிருந்த
தமிழ்மக்கள் வெளியேற அங்கு கல்வி பயின்ற மாணவர்களும் வெளியேறினர்.

அதனால் மாணவர்கள் இன்றி அப்பாடசாலை இயங்கிவந்த நிலையில் அம்பாறை
வலயக்கல்விப்பணிப்பாளர் விமலசேன மத்தும ஆராய்ச்சி இப்பாடசாலையை மூடிவிட கிழக்கு மாகாண கல்விச்செயலர் திசாநாயக்காவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி பயின்றதற்கான
ஆவணங்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது. அவரது தந்தையார் வேலுப்பிள்ளை
அக்காலத்தில் அம்பாறையில் கடமையாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -