மக்களின் எழுச்சிதான் ஹக்கீமை சாய்ந்தமருதிற்குள் வரவிடமால் தடுத்தது- பள்ளிவாயல் நிருவாகம் வீடியோ




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சாய்ந்தமருதிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீம் வருகை தர இருந்த சமயம் சாய்ந்தமருது பள்ளிவயாலுக்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி தலைவர் ஹக்கீமை சாய்ந்தமருதுக்குள் விடமாட்டோம் என்ற மக்களுடைய எழுச்சி பேரணி நேற்று 24.12.2017 ஞாயிற்று கிழமை வெற்றிகரமாக இடம் பெற்றிருந்தது.

சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையானது கல்முனை மாநகர சபையில் பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கோடு சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரையும் சுயேற்சையாக களமிறக்கியுள்ளது. அந்த வகையில் நேற்று சாய்ந்தமருதிற்குள் வர விடாமல் ஏன் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தடுக்கப்பட்டார் என்ற கேள்விக்கு பள்ளிவாயல் நிருவாகம் தெரிவித்த கருத்தானது.

தேர்தல் காலங்கள் நெருங்குகின்ற பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என்ற பொய்யான வாக்குறுதியினை பகிரங்கமாக வழங்கி சாய்ந்தமருது மக்களை அரசியல் அநாதைகளாக்கி வருகின்றார். இதனை பூரணமாக விளங்கியுள்ள சகல தரப்பினரும் மேற்கொண்ட மக்கள் எழுச்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பள்ளிவாயல் நிருவாகம்… மக்களுடைய தீர்மானம் என்னவென்றால் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தராமல் எந்த கட்சியும் ஊருக்குள் வரக்கூடாது என்பதே. மக்கள் ஒன்று சேர்ந்து எடுத்த தீர்மானங்களை மக்கள் நிறை வேற்றுகின்றார்கள். ஹக்கீம் வருகை தந்திருப்பாராயின் அதைப்பற்றிய கவலை பள்ளிவாயல் நிருவாகத்திற்கு கிடையாது.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் சாய்ந்தமருதிற்கு வந்தாலும் வரலாம் வராமல் விட்டாலும் விடலாம், அதைப்பற்றிய கவலை எமக்கு கிடையாது. மக்கள்தான் தாங்கள் காலாகாலமாக ஹக்கீமினால் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என மன முடைந்து காணப்படுகின்றனர். ஒட்டு மொத்த ஊரும் சேர்ந்து பல தடவைகள் முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்குகளை வழங்கியிருந்தும் அந்த வாக்குகளின் பெறுமதியினை கட்சியின் தலைவர் இல்லாமல் செய்து விட்டார்.

அதே போலவே பிரதேசத்தில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினரும் செயற்பட்டு வருகின்றார். பாரளுமன்ற உறுப்பினர் கல்முனை பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்தினாலும் சாய்ந்தமருது மக்கள் வழங்குகின்ற வாக்குகளை வைத்தே அவர் தனது கதிரையினை பாதுக்காத்துகொள்ள கூடியவராக இருக்கின்றார். அப்துர் ரவூப் ஹக்கீமை கட்சியின் தலைவராக ஆக்கியதும் இந்த சாய்ந்தமருது மக்களேயாகும். அதனால்தான் விரக்தி அடைந்துள்ள மக்கள் நேற்று அவரை சாய்ந்தமருதிற்குள் வரவிடாமல் தடுதுள்ளனர் என மேலும் தனது கருத்தினை தெரிவித்தார் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாகவும், சாய்ந்தமருதில் வேட்பாளர்கள் சுயேற்சையாக களமிறக்கப்பட்டுள்ளமை, திரை மறைவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சூழ்ச்சிகள் இருக்கின்றது என பேசப்படுவது சம்பந்தமாக தொடுக்கப்பட்ட காரசரமான பல கேள்விகளுக்கு பள்ளிவாயல் நிருவாகம் வழங்கிய Diplomatic கலந்த பதில்களினுடைய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -