எம்.ஜே.எம்.சஜீத்-
புதிய அரசியலமைப்பு மாற்றமும் - மக்களின் எதிர்பார்ப்பையும் ஊடக மயப்படுத்துவதின் மூலம் தூய அரசியலுக்கான பங்களிப்பை வழங்குதல் எனும் எண்ணகக்ருவிற்கமைவாக ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு இன்று (23) அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் வளவாளராகக் கலந்துகொண்டார்.
இதன்போது உளளுராட்சி மன்ற திருத்தச்சட்டமூலம் பற்றிய விளக்கம், வட்டாரத் தேர்தலின் நன்மை, தீமை மற்றும் அவசியம் தொடர்பான விளக்கம், அரசியலில் பெண்களின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய விளக்கம், உளளுராட்சி கட்டமைப்பு பற்றிய தெளிவுறுத்தல் என்பன வளவாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் பெண் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.