மலையக பெருந்தோட்ட வாழ் சொந்தங்கள் அனைவருக்கும், உலக வாழ் கிறிஸ்தவ உறவுகளுக்கும் மலையக தேசிய முன்னணியின் இனித்திடும் நத்தார் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதனை பெரும்பாக்கியமாக கருதுவதாக கட்சியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது நத்தார் தின செய்தியில் மேலும்…
பெத்லஹேம் நகரின் மாட்டுத் தொழுவமொன்றில் யேசு பாலன் பிறந்தார், இதன் மூலம் அப்பழுக்கற்ற எளிமையை வெளிப்படுகின்றது.
தாழ்த்தப்பட்டவர்கள், அப்பாவிகள், நோயாளிகள், சிறுவர்கள், முதியவர்கள், சிக்கல்களை எதிர்நோக்குவோருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற செய்தியை யேசு பாலன் இந்த உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார்.
நத்தாரின் ஒளிக் கீற்றுக்கள் அனைத்து உள்ளங்களையும் மகிழ்விக்க யேசு கிறிஸ்துநாதனின் அருள் பாலிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்.
அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் அன்பும், சகோதரத்துவமும், சகவாழ்வும் பெருகிட இந்த இனிய தினத்தில் உறுதி பூணுவோம்.
குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர் சொந்தங்களின் வாழ்வில் சுபீட்சமும், சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் நிரம்பி வழியும் இனிய தித்திக்கும் நத்தார் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் உளப்பூரிப்பு கொள்கின்றோம் என கலாநிதி ரிஷி செந்திராஜ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
