இன்றைய தினம் (09) குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு 03 தடவைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது வாக்கெடுப்பில் சட்டமூலம் 88 மேலதிக வாக்குகளால் சபையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஆதரவாக 144 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு, எதிராக எவரும் வாக்களிக்காதபோதும் 56 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையில் இருந்தபோதும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு மேலதிகமாகவும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக மேலும் இரண்டு தடவைகள் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
இரண்டாவது வாக்கெடுப்பில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 143 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொ்ளவில்லை.
மூன்றாவது வாக்கெடுப்பின்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது 08 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். இதன்போது உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி வாக்கெடுப்பில் ஆதரவு - 139; எதிர்ப்பு - 49,
8 பேர் பங்கேற்கவில்லை மு.கா., அ.இ.ம.கா. இரண்டாம் வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை