மு.இராமச்சந்திரன்-
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரனின் இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக 35 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிதியிலிருந்து பெறப்பட்ட சீமெந்து பொதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆலய பரிபாலன சபையினரிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.
இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச முக்கியஸ்தர்களான ஜெஸ்டின் , நாகேந்திரன் , மோகன்ராஜ் , மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.