காசல்ரீ நீர்தேக்கத்தின் கரையோரத்தில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி பலி-படங்கள்





மு.இராமச்சந்திரன்-


காசல்ரீ நீர்தேக்கத்தின் கரையோரத்தில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி பலியானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா பகுதியிலே 06.12.2017 மதியம் 2. மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நீர்தேக்கத்தின் கரையோரபகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஸமீர் என்பரவே இவ்வாறு பலியானார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த விடுதியில் மூன்று நாட்களாக தங்கியிருந்த மேற்படி நபர் அந்தவிடுதிக்கு வந்த வெளிநாட்டு உள்ளசபயணிகளுடன் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும்டிக்கோயா ஆறு நீர்தேக்கத்துடன் சங்கமிக்கும் பகுதியில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் வெளீநாட்டவரால் நீரில் மூழ்கியவர் மீட்கப்பட்டுள்ளார்.

 பின்னர் உடனடியாக. டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நீராடும் போது நீரில் மூழ்கிபலியாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மரணம் தொடர்பிலானமேலதிக விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -