உள்ளுராட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம்


காரைதீவு நிருபர் சகா-

திர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கா மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலிருந்தும் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை எற்றுக்கொள்ளும் இறுதித்திகதி இரண்டு பிரிவுகளாக தேர்தல் ஆணையாளரால் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் 8 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறைகாலம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதில் ஏற்படும் தாமத நிலையினைனக் கருத்திற் கொண்டு குறித்த அறிவித்தலை மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் விடுத்துள்ளார்

இதன்போது முதற்கட்டமாக ஏறாவூர் நகரசபை, ஏறபவூர் பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, ஆகிய நான்கு சபைகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்போரின் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் 2017.12.15 திகதி இறுதி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பிரிவாக எஞ்சிய சபைகளான மட்டக்களப்பு நகர சபை, காத்தான்குடி நகர சபை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, போரதீவுப்பற்று பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை ஆகிய எட்டு சபைகளுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி தினமாக 2017.12.22 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த தினத்திற்குள் அனுப்பிவைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தினங்களுக்கு பின்னர் அனுப்பிவைக்கப்படும் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும் என அவ்வறிவித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது…
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -