வீதி திருத்தப்படாமையினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு - 15 ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இக்பாவத்தை சந்தி வரையிலான வீதி நீண்டகாலமாக திருத்தப்படாது குண்டும்குழியுமாக காணப்பட்ட நிலையில் அவ் வீதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் நீர்க்குழாய் திருத்தப்பணிகள் நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நிலையில் அவ்வீதியூடாக போக்குவரத்து செய்வதில் பிரயாணிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெயில் காலத்தில் தூசியாலும் மழைகாலங்களில் சேறும்சகதியாலும் அவ்வீதியூடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மாநாகர சபையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சகையும் வீதி அதிகார சபையும் கவனத்தில் எடுத்து குறித்த வீதியை சீக்கிரத்தில் சீர் செய்தர வேண்டுமென ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -