இந்தியாவின் கல்கத்தாவிலுள்ள அரச வைத்தியசாலையொன்றில், முஸ்குரா பிபி என்ற 23 வயதுடைய பெண்ணொருவர் கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.ஆனால் அக்குழந்தை பிறந்து 4 மணி நேரத்தில் துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளமையானது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அக்குழந்தையின் இடுப்பு பகுதியும் காலுடன் ஒட்டியிருந்ததால், பாலினத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் வைத்தியர்கள் தடுமாறியுள்ளனர்.இது குறித்து வைத்தியர்கள் மேலும் கூறுகையில், கர்ப்ப காலத்தில் தாய் சரியான மருந்து வகைகளை எடுத்துக் கொள்ளாததே இதற்கு காரணமென தெரிவித்துள்ளனர்.இதனால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவையும் கிடைக்கப் பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் இந்தியாவில் இவ்வாறான ஒரு குழந்தை பிறந்தது என்றும், இப்படியான தோற்றத்தில் பிறக்கும் குழந்தைகள் மெர்மெய்ட் சிண்ட்ரோம் எனும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களெனவும்,இந்நோய் 60 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் குழந்தைகளில் ஒன்றைத் தாக்குகிறது என்றும் வைத்தியர்கள் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -