2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியீடு


2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த முத்திரை வெளியிட்டு நிகழ்வில் நிகழ்வின் பிரதம விருந்தினர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம்(புதுப்பள்ளி) இணைக்கப்பட்டுள்ளது.

இந்த முத்திரைக்கான புகைப்படத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் முஸ்லீம் மஜ்லீஸ் செயலாளரும் மாணவரும் தற்போதைய ஊடகவியலாளருமான பாறுக் ஷிஹான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை கிராமத்தில் பிறந்ததுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரியான மர்ஹும் எச்.எம் பாறுக் முன்னாள் தாதிய உத்தியோகத்தர் வல்கீஸ் பாறுக் ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -