Youth With Talent சிரமசக்தி வேலைத்திட்டம் திருநாவற்குளம்




தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள திருநாவற்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்படும் பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன், ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு.யோகன், தனியார் பேருந்து போக்குவரத்து சங்க தலைவர் திரு.ரஞ்சன் ,சமூக ஆர்வலர்களான திரு நாகராஜா தர்மலிங்கம், மற்றும் கைலரஞ்சன்[சிவம்], தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை பொறுப்பாளர் திரு.கோபி கழகத்தின் உப தலைவர் திரு கெர்சோன் உறுப்பினர்களான பிரதீபன், சதீஸ் ஆகியோர் அண்மையில் பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -