அஷ்கர் தஸ்லீம்-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை(NFGG) திஹாரிய பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம், கடந்த 24.11.2017 அன்று இரவு லப்சன் மண்டபத்தில்பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திராத அளவு மக்கள் மிக்க ஆர்வத்துடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் ஆகியோர்உரையாற்றினர்.
NFGG யின் கொள்கைநிலைப்பாடுகள், கட்டமைப்பு மற்றும் அதன் அரசியல் செயற்பாட்டு வழிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கும் வகையில், உரைகள்ஆற்றப்பட்டன. இவ் உரைகளைத் தொடர்ந்து, NFGG பற்றியும், அதன் போக்கு பற்றியும் மக்கள் தொடுத்த வினாக்களுக்கும், விரிவான பதில்கள் வழங்கப்பட்டன.
வழமையான அரசியல் கட்சிகளின் மீது அதிருப்தியடைந்துள்ள திஹாரி மக்கள், அரசியல் ரீதியான மாற்றொன்றை எதிர்பார்து, NFGG கட்சியை திஹாரியில்அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மக்கள் நலன் சார் அரசியலுக்கு அடிப்படை அவசியமான முன்மாதிரி விழுமியங்களைப் கடந்த 11 வருட காலமாக பின்பற்றி, நல்லாட்சி தத்துவத்தை நடைமுறையில்செயற்படுத்திக் காட்டி வரும் NFGG உடன் மக்கள் வேகமாக இணையத் தொடங்கியிருப்பது, அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட திஹாரி, கஹடோவிட, உடுகொட போன்றபிரதேச மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றது.
தொடர்ந்தும் NFGG யின் விழிப்புணாவுக் கூட்டங்கள் இப்பிரதேசங்களில் நடாத்தப்படும் என NFGGயினர் உறுதியளித்தனர்.




