நிலுக சஞ்ஜீவ விதானகே என்ற 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஹபரணை அநுராதபுரம் பிரதான வீதியில் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்ற இந்த தம்பதியினர், அடிக்கடி முரண்பட்டுக் கொள்வதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்று (17) அதிகாலையில் இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடையவே, கணவனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி கோடாரியுடன் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் இடம்பெற்ற போது பிள்ளைகள் உறவினரின் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் இரண்டாவது மனைவி இதுவென்பதுடன், அவர் முன்னதாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பது தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் கெக்கிராவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
