இறைச்சிக் கடையை 2018ம் ஆண்டுக்காக டெண்டர் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பௌத்த பிக்கு

த்துகமையில் இறைச்சிக் கடையை 2018ம் ஆண்டுக்காக டெண்டர் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பௌத்த பிக்கு அதற்கான மூன்று மாதத்துக்கான கட்டுப்பணத்தை நேற்று செலுத்தியுள்ளார்.

மத்துகம பிரதேச சபையினால் டெண்டர் விடப்பட்ட மத்துகம நகரில் காணப்படும் ஒரே ஒரு இறைச்சிக்கடையை மாவிட்ட ஞானரத்ன தேரர் 32 இலட்சம் ரூபாவுக்கு டெண்டர் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கான மூன்று மாதத்துக்கான கட்டுப்பணமாக 806,405.50 ரூபாவை மதுகம பிரதேச சபை உதவி முகாமையாளரிடம் நேற்று செலுத்தியுள்ளார்.

அதன்படி, “இறைச்சிக்கடையை டெண்டர் பெற்று மத்துகமையில் மாடறுப்பதை நிறுத்துவதாக” தெரிவித்த மாவிட்ட ஞானரத்ன தேரர், “தேரர் என்ற வகையில் இறைச்சிக்கடையை டெண்டர் பெற்றது இறைச்சி விற்பனை செய்வதற்கல்ல, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பார்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், “ஒப்பந்த அடிப்படையில் செயற்பட வேண்டி வரும், ஒப்பந்த அடிப்படையிலான வியாபாரம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், தொடர்ந்து 07 நாட்கள் கடையை மூடி வைக்க முடியாது” என மத்துகம பிரதேச சபை செயலாளர் அஷோக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒப்பந்தத்தை மீறினால் டெண்டர் இரத்துச் செய்யப்படும் எனவும் மத்துகம பிரதேச சபை செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -