எம்.வை.அமீர் -
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம், ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு 2017-11-08 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
உயிர்காக்கும் இவ்வாறான புனித நிகழ்வில் இன மத வேறுபாடின்றி மாணவர்களும் ஊழியர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்த அதேவேளை கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மாணவர் ஒன்றியம் இவ்வாறான இரத்த தானம் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
பிரயோக விஞ்ஞான பீட, பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செயினூடீன் மற்றும் உதவிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மஹீர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இன்நிகழ்வுகளில் பீடத்தில் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ், பௌத்த மற்றும் இந்து அமைப்புக்களும் குறித்த இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.