கிண்ணியா நகர சபையின் புதிய செயலாளராக இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட நூர்தீன் மொஹமட் நௌபீஸ் அண்மையில்(16.11.2017)கிழக்கு ஆளுனரின் அதிரடி இடமாற்றத்தால் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஏறாவூரை சேர்ந்த சியாஉல் ஹக் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கிண்ணியாவில் கடமையேற்று அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நௌபீஸ் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கிண்ணியா நகர சபையின் செயலாளராக கடமையை பொறுப்பேற்ற இவர் திருகோணமலை கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பதில் மாவட்ட உதவிப் பணிப்பாளராகவும் மூன்று வருடம் கடமையாற்றி வருகிறார்.மேலும் முன்னால் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.இதற்கு முன்னரும் பல உயர்பதவிகளையும் அரச திணைக்களங்களில் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
