ஏ. எச். எம். பூமுதீன்
கல்முனை தொகுதியின் அரசியல், அபிவிருத்தி மற்றும் தொழில் வழங்கல் போன்ற செயட்பாடுகளில் இருந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தற்காலிகமாக ஒதுங்கி கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.
கல்முனை தொகுதி ஆண்டாண்டுகாலமாக அரசியலில் நன்றி கெட்ட தனத்துக்கு பெயர் போன தொகுதியாகும்.
கல்முனையின் அபிவிருத்தி நாயகன் மர்ஹூம் மன்சூரை செல்லாக்காசாகிய தொகுதி இது.
இந்த தொகுதியில் சாய்ந்தமருது என்பது நன்றி கெட்ட தனத்துக்கு அந்த ஊரே அதுக்கு நிகர்.
எம்.எஸ். காரியப்பர், அஹமட், மயோன் முஸ்தபா, நிஜாமுதீன் என்று சாய்ந்தமருதில் இருந்து இவர்கள் பாராளுமன்றம் செல்ல பெரும் பங்காற்றிய கல்முனைக்குடியின் மகன் மர்ஹூம் மன்சூரை தோற்கடித்து, இப்போது அதே கல்முனைக்குடியை சேர்ந்த பிரதியமைச்சர் ஹரீஸை துரோகி என்கிற அளவுக்கு நன்றி மறக்கும் ஊர் அது.
சாய்ந்தமருது என்பது முகாவின் கோட்டை. ஆனால் , நீங்கள் இரு பெரும் நிறுவனங்களுக்கு அந்த ஊரின் இருவரை தலைவர் ஆக்கினீர்கள். அதுமட்டுமன்றி, அந்த நிறுவனங்களின் கிளைகளை சாய்ந்தமருதில் நிறுவி பலருக்கு தொழில் வழங்கினீர்கள்.
சாய்ந்தமருத்துக்கு மட்டுமாக இதுவரை- சதொச நியமனம் 40 , அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் 15 , தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையில் 5 , வேறு நிறுவனங்களில் மொத்தமாக 18 , Lanka Ashoka லிமிடெட் 3 , தனிப்பட்ட செயலாளர்கள் 4 , தனிப்பட்ட சாரதிகள் 4 , நிறுவன சாரதிகள் 6 என 100 இட்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகளை வழங்கினீர்கள்.
அதுமட்டுமா, யுவதிகளுக்கான பல தையல்நிலையங்கள்,இயந்திரங்கள்,
பள்ளிவாசலுக்கான நிதி,வாகனம்
இன்னும் பல அபிவிருத்திகளை செய்துள்ளீர்கள்.
இறுதியில், உயிரோடு உள்ள உங்களை பொம்மை கட்டி எரித்தார்கள்.
இதைவிட சாய்ந்தமருது சமூகம் நன்றிகெட்டவர்கள் என்பதற்கு வேறு என்ன உதாரணமும் ஆதாரமும் வேண்டும் அமைச்சர் அவர்களே.
தலைவா, சாய்ந்தமருதில் உள்ள உங்கள் அமைச்சின் கீழுள்ள அசோக் லேலண்ட் ,அரச வர்த்தக கூட்டுத்தாபனம் ஆகிய கிளைகளை அங்கிருந்து அகற்றுங்கள். அங்கு தொழில் புரிவோரை வேறு கிளைகளுக்கு மாற்றுங்கள்.
சாய்ந்தமருது என்று அச்சப்பட அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை. 18000 வாக்கை தவிர.உங்கள் அருமை புரியும் வரை சாய்ந்தமருத்தும் வேண்டாம் பொதுவாக கல்முனை தொகுதியே வேண்டாம்.களமுனைக்கு எதுவும் செய்தால்தான் ஆதரவளிப்போம் , தொழிலும் வாகனமும் தந்தால்தான் விசுவாசமாக நிப்போம் என்ற கூட்டமல்ல நான் உட்பட நாங்கள்.
என்னைப்போன்ற, எங்களைப்போன்ற பலர் இத்தொகுதியில் இருக்கின்றார்கள், இருப்பார்கள் . அவர்கள் போதும்- கல்முனை தொகுதியை விட்டு நீங்கள் தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் காலத்தில், இத்தொகுதியில் உங்கள் நாமத்தையும், உங்கள் கட்சியையும் உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க.
