மட்டு மாநாகர ஆணையாளராக மணிவண்ணன் ; முதலமைச்சின் உதவிச்செயலாளராக தவராஜா

காரைதீவு நிருபர் சகா-

ட்டக்களப்பு மாநகர ஆணையாளராவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளைஇ மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக என். மணிவண்ணன் நியமனம் பெற்றுள்ளார்.

இவ்விருவரும், தமது கடமைகளை (08) பொறுப்பேற்றுள்ளனர்.
இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகக் கடமை புரிந்து வந்த வெள்ளத்தம்பி தவராஜா, கிழக்கு மாகாண முதலமைச்சு செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றதை அடுத்து, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

தற்போது மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிவண்ணன், கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்களப் பணிப்பாளராகப் பதவி வகித்தவராவார்.

புதிய மாநகர ஆணையாளருக்கு, மட்டக்களப்பு மாநகர கேட்போர் கூடத்தில் அம்மாநகர அலுவலர்களால் நேற்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -