பாடசாலைகளில் கைவிரல் அடையாள வரவுப் பதிவு இயந்திரம் பொருத்த இன்று கண்டிப்பான உத்தரவு!




காரைதீவு நிருபர் சகா-

ம்மாந்துறை வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் எதிர்வரும் 2017.12.31இற்கு முன்னர் கைவிரல் அடையாள வரவுப் பதிவு இயந்திரம் பொருத்தப்பட வேண்டும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்எம்.எஸ்.சஹுதுல் நஜீம் மாதாந்த நேற்று(8) புதன்கிமை நடைபெற்றவலய அதிபர் கூட்டத்தில் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்..

சம்மாந்துறை வலய அதிபர்களுக்கான விசேட கூட்டம் நேற்று(8) புதன்கிழமை வலயக்கல்விக்காரியாலய அய்ன்ஸ்ரைன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வலயக்கணக்காளர் மேற்படி உத்தரவைப்பிறப்பித்து அதற்கான ஆவணங்களையும் கையளித்தார். கூட்டத்தில் எம்.கேந்திரமூர்த்தி மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் கோட்டகக்ல்விப்பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

கைவிரல் அடையாள வரவுப் பதிவு இயந்திரம் ஒன்று சுமார் 27ஆயிரம் ருபாவிற்கு கொள்வனவு செய்யமுடியும். அதனை பாடசாலைக்கணக்கிலிருந்து கொள்வனவு செய்யமுடியும் எனக்கூறப்பட்டது.

மேலும் மூன்றாந்தவணைப்பரீட்சை நடைபெறவிருக்கிறது. மிகவும் நேர்த்தியாகவும் செம்மையாகவும் அப்பரீட்சையை நடாத்தவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இறுதித்தவணைப்பரீட்சை எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 23ஆம் திகதி வரை நடாத்தப்படவிருக்கிறது. வழமைபோல் கல்முனை சம்மாந்றைது வலய அதிபர்கள் இணைந்து நடாத்துகின்ற இப்ரீட்சை புதிய பாடத்திட்டத்திற்கமைவாக நடாத்தப்படும் என்றார்.

கூடவே ஏனைய இடைநிலை ஆரம்பநெறி மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்..நவம்பர் 30ஆம் திகதி வரை இப்பரீட்சை நடைபெறும்.

பாடசாலை விடுமுறைக்கு முன்பதாக சகல வினாப்பத்திரங்களும் திருத்தம் செய்யப்பட்டு புள்ளிகள் கவனமாக இடப்பட்டு சகல மாணவர்களுக்கும் மாணவர் அறிக்கையினை கையளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -