தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள 2017ஃ2018ம் ஆண்டுக்கான இதழியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2017.11.12ம் திகதி 02.00 மணிக்கு வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தில் நடாத்தப்படவுள்ளது.
மார்ச் மாதம் கோரப்பட்ட திறந்த விண்ணப்பங்களுக்கு அமைவாக 40 பேர் நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவுத்தபால் மூலம் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கை நெறியின் உதவிப் பதிவாளர் தெரிவித்தார்.
குறித்த கற்கை நெறிக்கான கால எல்லை ஒரு வருடமாகும் என்பதுடன் வார இறுதி நாட்களில் மாத்திரம் வகுப்புக்கள் நடாத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
