பெண்களுக்கான பக்கம்: நீண்ட கருமையான கூந்தலை எப்படி பாதுகாக்கலாம்..

கூந்தலை நன்றாக பராமரித்தால் மிகவும் கருமையாக, நீளமாக வளரும். அந்த வகையில் இந்த குறிப்புகளை கொண்டு கூந்தலை பராமரித்து கொள்ளலாம். நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா இருந்தால் கண்டிப்பாக அந்த நாள் இறுதியில் கூந்தல் கலைந்து போகும். எனவே இதற்கு ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காணலாம்.



கொஞ்சம் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் போதும் கூந்தல் அதிசயிக்கும் படி அழகாக கலையாமல் இருக்கும். மேலும், நீளமான கூந்தல் என்றால் அதை முழுமையாக பராமரிக்க நீண்ட நேரம் தேவைப்படும். ஆயில் மற்றும் ஷாம்பு அதன் வேரை சென்றடைய நீண்ட நேரம் ஆகும். எனவே இதற்கு ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் எளிதில் முடியின் வேருக்கு சென்று நல்ல பலனை தரும். மேலும் மூலிகை மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் அதிகமான பலனை பெறலாம்.



அதைத்தொடர்ந்து, ஹேர் கன்டிஷனரை நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் எண்ணெய் பசை மட்டும் தான் போகும். ஆனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கன்டிஷனர் தேவை. தினமும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷனர் பயன்படுத்தினால் மிருதுவான மற்றும் அலங்கரிக்க ஏதுவான கூந்தல் கிடைக்கும்.IBC

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -