அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்







பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலையும் வெகுவாக முடக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இதனால் அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்குள்ளான நிலையில் சில அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகையும் குறைந்து காணப்பட்டது.

வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் உள்ளிட்ட குழுவினர் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு விரைந்து அதனை அகற்றும் பணியில் மிகத் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -