ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடங்களால் இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
அரசின் வரவுசெலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முதல் நாள் அதாவது, எட்டாம் திகதி மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரவுள்ளது. பல்வேறு தரப்பினராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் வெளியாகும் பட்சத்தில் அது கொழும்பு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமென அரச உயர்மட்டம் கருதுவதாக அறியமுடிகின்றது.
இதன் பின்னணியிலேயே அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் எனக் கருதப்படுவதால் அனைத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கொழும்பில் இருக்கவேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் விசேட தனிப்பட்ட சந்திப்பொன்று ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது இருதரப்பு கருத்து முரண்பாடுகளை களைவது குறித்து ஆராயப்படுமெனவும் அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுஒ
