சாய்ந்தமருதை ஒரு போர்க்களம் போல் கண்டேன்- அக்கரைப்பற்று கவிஞர்

சென்ற கிழமை பரீட்சனிடமிருந்து (வபா பாறூக்) ஒரு கோல் வந்தது. அவரது 'முரண்பாட்டு சமன்பாடுகள்' கவிதைத் தொகுதிக்கு ஒரு விமர்சன உரையாற்றும்படி கூறியிருந்தார். நானும் மழை பாராது இன்று 6.30 மணிக்கு சாய்ந்தமருதில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்றேன். கவிதைகள் பற்றிய உரையாடல்கள் மிக சுவாரஷ்யமாக சென்று கொண்டிருந்தன. அப்பொழுது அவரின் மச்சானான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதும், அவரது சகோதரரும் வந்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து தீடீரென ஒரு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அம்மாடி... பரீட்சனின் வீட்டுக் கண்ணாடிகள் சிதறிக் கொண்டிருந்தன.

பெரும் போர்க் களத்தினைப் போல பரீட்சனின் வீடு முழுக்க கூக்கூரல்கள். சாரி சாரியாக பரீட்சனின் வீட்டுக் கண்ணாடிகள் சலசலத்துக் கொண்டிருந்தன. சிலர் சாய்ந்தமருது மக்களை சமானாதப்படுத்திக் கொண்டிருந்தனர். மக்களோ கொதி நிலையில் வீங்கிக் கிடந்தனர். பரீட்சனின் முன் வாசலில் ஒன்றுமே அறியாமல் ஒற்றைக் காலில் சாய்ந்து கிடக்கும், எனது உள்ளதுமொரு மோட்டார் சைக்கிளின் நிலையினை எண்ணி குபீரென ஏப்பம் விட்டேன். 

பரீட்சனின் வாசல் முழுக்க குழப்பம் நிறைந்திருந்தது. நல்ல காலம் சைக்கிளுக்கு ஒன்றும் நடக்கவில்லை. நெஞ்சிலே பால் வார்த்த மாதிரியே ஒரு பீலிங்...

கவிதை உரையாடலுக்கு வந்த சோதயைா? ஜவாதிற்கு வந்த வேதனையா? ஒன்றுமே புரியாமல் திமிர்த்து நின்றேன். இத்தனைக்கும் "நான் அக்கரைப்பற்று என்னை தயகூர்ந்து விட்டு விடுங்கள்" என கத்தனும் போல இருந்தது. அவர்களின் சத்தத்திற்குல் நமது சத்தம் ஒரு புச்சி வெடிலுக்கு ஒப்பானது. அம்புட்டம் கும்பிட்டாலும் விடமாட்டானுகள். 

நைஸாக அங்கிருந்து வெளியிறங்கினேன். ராணுவ வாகனங்களும், படையணியினரும் வீதி முழுக்க பரவிக் கிடநதனர். யுத்த பிரதேசத்திலிருந்து ஒரு அப்பாவி தப்பித்து, பாண் துண்டை சுரண்டிய சுண்டெலி போல பரீட்சனின் வாசலை விட்டு அபேஸ் ஆனேன்.
இனி இலக்கிய விமர்சனக் கூட்டங்களுக்கு புள்ளட் புரூப் அணிந்து செல்வதாக முடிவெடுத்து விட்டேன்.

அத்துடன் முக்கிய குறிப்பொன்று,

இந்த மு.கா மற்றும் அ.இ.ம.கா போராளிகளுக்கு நான் அழகான உபதேசம் ஒன்று செல்லுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி கேளுங்கோ. அல்லாஹுக்காக சாய்ந்தமருது பக்கம் உங்கள தலைமைகளை மறந்தும் அனுப்பீடாதீக... அப்புறம் நல்லா வருத்தப்படுவீக.


Sajeeth Ahamed ..முகநூலில் இருந்து
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -