திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகைச் சுடரோந்தி இன்று(27) மாலை 6.05 மணியளவில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் க.திருச்செல்வம் தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து சம்பூர் துயிலும் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வேண்டி விசேட பஸ் சேவையும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் மாவீரர் குடும்பத்தினர் புனர் வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகள் ,தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியினை செலுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
