திருகோணமலை ரொட்டவெவ எனும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் சலாம் யாசீம் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவில் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் சுகாதார திணைக்கள ஊழியராகவும் கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்தங்கிய தனது கிராமத்தில் இருந்து பல ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டு தற்போது கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவில் நியமனம் பெற்றிருப்பது இவரது முயற்சிக்கும் ஊடக தர்மத்துக்கும் கிடைத்தவெற்றி என்று தான் கூறவேண்டும் பல மயில் தூரம் திருகோணமலை சென்று ஊடகத்துறையில் செய்திகளை சேகரிப்பதையும் நான் கண்ட அனுபவத்தில் இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
ஆரம்பகால தனது ஊடக பயணத்தை 2000 ம் ஆண்டில் நேயம் எனும் ஒரு பத்திரிகை ஊடாக தடம்பதித்த அன்றைய தனது ஊடக பயணங்கள் இற்றை வரைக்கும் தொடருகின்றன .சக்தி,சுடர்ஒளி,தமிழ்மிரர்,நவமணி போன்ற பத்திரிகைகளின் பிரதேச ஊடகவியலாளராகவும் தற்போது கூட ஊடத்துறையில் தனது நீண்டகால வரலாறு தொட்ட கடந்து சென்ற காலங்களை மீண்டும் மீட்டிய தருனம் இது இவருக்கு கிடைத்த கிழக்கு ஆளுனர் ஊடக பிரிவின் வெற்றிக்கும் வழிவகுத்தது.
சிறிலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும்இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
