பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு நிறுத்தாமல் தப்பிச்சென்ற இரானுவ கெப் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு (26) 8.30மணியளவில்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலை 10ம் கட்டைப்பகுதியில் பொலிஸ் கெப் வாகனத்துடன் மோதி விட்டு நிறுத்தாமல் செல்வதாக ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து நிறுத்தாமல் பயணித்த கெப் வாகனத்தை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நிறுத்திய வேளை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது கெப் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் சாலியபுர இரானுவ முகாமிற்கு சொந்தமான NW DAD-2292 என்னும் யுக 50962 என்ற வாகனத்திற்கே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து -அனுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனம் பொலிஸ் வாகனத்தை மோதி விட்டு நிறுத்தாமல் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதே வேளை இரானுவ கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் சென்றதாகவும் கெப் வாகனத்திற்குள் ஜந்து பேர் பயணித்ததாகவும் அனுராதபுரம் சாலியபுர இரானுவ முகாமில் கடமையாற்றும் உயரதிகாரியொருவரே இவ்வாகனத்தை அனுமதியின்றி திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இரானுவ கெப் வாகனத்தின் சாரதியான 48 வயதுடைய இரானுவ வீரரை கைது செய்துள்ளதாகவும் இன்று திங்கள்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
