க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வளைவுப்பகுதியில் 25.11.2017 இன்று அதிகாலை 01.00 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மஹியங்கனை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி மணல் எற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமலும், தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாகவும், ஏற்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


