நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன..?

ள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி கலைந்து சென்றதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இக்கூட்டத்தில் ஒன்றுபட்ட கட்சித் தலைவர்கள் எந்தவித காத்திரமான தீர்மானங்களும் இன்றி பிரிந்து சென்றதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ஆகியோர் தேர்தலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்களினால் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளை அவசரப்படுத்தி குறித்த வழக்கில் கூறப்படும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கல் என்பது முதலாவது யோசனையாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போதே பாராளுமன்றத்தில் விசேட சட்டமொன்றை நிறைவேற்றி குறித்த வர்த்தமானியில் உள்ள குறையை நிவர்த்தி செய்தல் என்பதனை இரண்டாவது யோசனையாகவும் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு மற்றுமொரு கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.(DC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -