எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (10) அட்டாளைச்சேனை றகுமானியாபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேசிக்கப்பட்டுள்ள எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கொள்கைபரப்புச் செயலாளர் எப்.எம்.நழீர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய முறையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளித்தனர்.