தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் - ஆர்ப்பாட்டம்



க.கிஷாந்தன்-

லைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நீக்கப்பட்டுள்ள தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.

மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உந்து சக்தியாக செயல்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அங்கிருந்து நீக்கியமை தவறான விடயம் என இலங்கை அரசாங்கத்தின் குறித்தி அமைச்சின் செயல்பாட்டை கண்டித்து தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளிட வேண்டும் என வழியுறுத்தி மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் பலருக்கு நன்றிகள் தெரிவித்ததோடு, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

11.11.2017 அன்று காலை லக்ஷபான தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டதுடன், இ.தொ.காவின் பிராந்திய பொறுப்பாளரான வெள்ளையன் தினேஷ் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டகாரர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.

அட்டன் தொழிற்பயிற்சி நிலைய விவகாரம் சமூகத்திற்கிடையிலான ஒரு பிரச்சினையாக உருவெடுக்கப்பட்டு தோட்ட பகுதிகள் மட்டுமன்றி நகர் பகுதிகளிலும் போராட்ட வடிவை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க இந்திய வம்சாவளி மக்கள் வாழும் மலையக பகுதியில் சௌமிய மூர்த்தி தொண்டமானின் சேவையை உணர்ந்து இந்திய தமிழ்நாட்டு பிராந்தியத்தின் முக்கிய தலைவர்கள் தங்களது எதிர்ப்பினை ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -