ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா அல்இர்பான் வித்தியாலய வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் 5 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடூப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.பைசல் நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த வயது24 இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறுநேற்றிரவு(10) கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசகிய தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இன்னுமொருவர் இன்று(11) காலை கிண்ணியா நடுத்தீவு ஆயுல்வேத வைத்தியசாலை அருகில் வைத்து பத்து கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வயது24 நடுத்தீவைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவூம் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை செய்துவருவதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.