ஐ.நா.வின் ஆலோசனைப்படியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா.வின் மனித உரிமைகள் மீதான சீராய்வுகளின்போது, இலங்கையில்தன்னினச் சேர்க்கை உட்பட முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்குஅங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கேள்விஎழுப்பின.
இலங்கையின் சட்டங்களின்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு பத்துஆண்டுகால சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியும்.
ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் இவ்வாறான பாலியல்செயற்பாடுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வின்ஏனைய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.
அதை அமல்படுத்த அரசு சம்மதித்துள்ளதையடுத்து, அதற்கானவிதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைகள் நடைபெறவுள்ளன.
எனினும், இலங்கையில் ஓரினச் சேர்க்கை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்னகூறியுள்ளதைச் சுட்டிக் காட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஐ.நா.வின்பரிந்துரைகளை அரசு முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.நா. பரிந்துரைகளை ஏற்று இந்தோனேசியாஓரினச் சேர்க்கையைச் சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.மநி,
எங்க போகப்போகுதோ இலங்கை...!
