கல்குடா மஜ்லிசுஸ் சூறாவினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு



டந்த 2017/11/23  திகதி அன்று எமது கல்குடா மஜ்லிசுஸ் சூறாவினால் எம் சீ எச் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது இளைஞர்கள் பற்றிய பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டதோடு கல்குடா மஜ்லிசுஸ் சூறா எதிர்காலத்தில் தமது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, இளைஞர்கள் பக்கம் தமது பார்வையை செலுத்தும் ஓர் நிகழ்வாக, இது அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கல்குடா மஜ்லிஸ் ஸூராவின் தலைவரும் சட்டத்தரணியுமான, கௌரவ.ஈ.சஹாப்தீன் அவா்களும், சூரா சபையின் செயலாளா் எம் ஐ ஹாமித் –சிராஜி அவர்களும், பொருளாளா் எம்.எச் எம் கபீா் ஹாஜியார் அவா்களும், உள்ளடங்கலாக முக்கிய அங்கத்தவா்கள் பலரும் கந்து சிறப்பித்திருந்தனா்.

மாவடிச்சேனை எம் சீ எச் விளையாட்டுக் கழக தலைவா் சதாம் உட்பட, விளையாட்டு வீரா்கள் பலரும் இதன்போது பிரசன்னமாயிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிண்ணனியின், ஒரு கட்டமாகவே இன் நிகழ்வினை மஜ்லிஸ் ஷூரா ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கல்குடா மஜ்லிசுஸ் சூறா சபைத்தலைவர் சட்டத்தரணி ஈ. சகாப்தீன் அவர்கள், எதிாகாலத்தில் இதன் தொடரான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும். தெரிவித்தார் மேலும் நட்சிந்தனையும் போட்டித்தன்மை மிக்கதும் விட்டுக்கொடுப்பு மிக்கதுமான இளைஞா்களை, உருவாக்கும் நோக்குடன் விளையாட்டு கழகங்களை, ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்திய அதே நேரம், அவ்வப் போது அவைற்றை நடை முறைப்படுத்த எண்ணியுள்ளோம் என்றார்.

சமூக சீரழிவை எமது பகுதியிலிருந்து துடைத்தொியும் நோக்கில் பல்வேறு வேலைத்ததிட்டங்களை கல்குடா மஜ்லிஸ் ஷூரா சம காலத்தில் முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஒத்துழைப்பு இளைஞர்களிடம் இருந்த வெளிப்பட வேண்டும் என்ற வேண்டுகோலை தமது ஆதங்கமாகவும் முன்வைத்தார்

இதன் போது கருத்து தெரிவித்த கல்குடா மஜ்லிஸ் ஸூராவின் நிர்வாக உறுப்பினர் எம் ரிஸ்வி இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள், ஒர் சமுதாயத்தின் முதுகெலும்பு இளைஞர்கள், ஒரு சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்வதும் தலை குனிந்து சாவதும் இளைஞர்கள் கையிலேயே உள்ளது. இப்படி பல கருத்துக்கள் பேசப்படினும் தற்போதைய நவீன யுகத்தில் ஒரு சமுதாயத்தின் அறிவியல் எழுச்சி, ஆன்மீக எழுச்சி, மற்றும் பண்பாட்டு எழுச்சி போன்றவற்றை வெளிப்படுத்தும் சமுதாய முகப்புத்துகம்தான் இளைஞர்கள் என்றால் மிகையில்லை. காரணம் ஒட்டு மொத்த சமுதாயத்தினதும் இருப்பு, பலம், எதிர்காலம் கருதிய திட்டமிடல்கள், அதற்கான முன்னெடுப்புக்கள் பாரிய பொறுப்பு, இளைஞர்களின் முதுகிலேயே சுமத்தப்பட்டுள்ளது.

எனவே திட்டங்களை வைத்து விளைவுகளை பேசிய காலம் மாறி, விளைவுகளை அவதானித்து திட்டங்களை ஒழுங்குபடுத்தவேண்டிய காலத்தில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

. ஒரு சமுதாயத்தில் பிரதான மூன்று வகை பகுதியினர் விடை சொல்ல வேண்டியவர்களாவர்.

1. அந்த சமுதாயத்திலுள்ள படித்த, பண்பாடுள்ள, மற்றும் ஆன்மீகப் பிண்ணனி கொண்ட அனுபவம்வாய்ந்த பெரியவர்கள். இவர்கள் இளைஞர்களை விழிப்புணர்வு ஊட்டி ஒழுங்கு படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

2. அரசியல் மற்றும் சமுதாய அதிகாரங்களை தக்கவைத்துள்ளோர். இவர்கள் ஒருமித்து செயற்பட்டு இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

3. சமுதாயத்தில் பொருளாதார வலுவுள்ளவர்கள் செல்வந்தர்கள். இவர்கள் இளைஞர்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகைளை நிவர்த்திக்குமுகமாக, தொழில் தளங்களை ஏற்படுத்தி, உள்ளெடுக்கப்படுபவர்களுக்கான தொழில் வழிகாட்டல் உட்பட, தலைமைத்துவப்பயிற்சி போன்ற இன்ன பல வேலைத்திட்டங்களை வழங்க வேண்டும்

அடுத்து சிறப்புரையாற்றிய கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் உப தலைவராகிய ஜனாப் ஜே . நஜீம் மௌலவி அவா்கள் “ பாடசாலை ஓய்வு நேரங்களில் மாணவா்களும், ஏனைய இளைஞா்களும் வேலைவெட்டியின்றி, சும்மா ஊா் சுற்றித்திறிவதனால் தீயவா்களது தீய நட்புக்கு ஆட்பட்டு, போதை வஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகும் ஆபத்து, எமது பிரதேசத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படுவதை சுட்டிக் காட்டினார். மேலும் இந்த போதை வஸ்த்துப் பாவனையில் போதை மாத்திரைகளின் பாவனை அதிகரித்துள்ளது மிகுந்த கவலை அளிப்பதகவும் தனது கவலையை வெளிப்படுத்தினார். 

இதன்மூலம் எதிா்கால சமுதாயம் அழிவடைந்துபோகும் ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளதுடன், இளைஞா்கள் ஆண்மையற்றவா்களாகவும், வாரிசு பாக்கியம் பெற முடியாவதா்களாவும், மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது

இன்று ஒரு சமுதாயத்தை அழிக்க கொல்லத்தான் வேண்டும் என்றில்லை தற்போதைய நவீன அழிவுக் கோட்பாட்டளார்கள் அந்த சமுதாய இளைஞர்களை நெறிபிறழச் செய்து அதனடியில் சமுதாய விரோத சக்தியாக அவர்கள் உருமாறும் வண்ணம் சினிமா போன்ற கருவிகள் மூலம் மூளைச் சலவை செய்தாலே போதும், ஏற்கனவே போதைக்கு அடிமையாக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை தாங்களே அழித்துக் கொள்வர் என்கின்றனர். எனவே இவற்றை நன்குணர்ந்து செயற்படுவது இன்றைய இளைஞர்களின் கைகலில் உள்ளது என்றார்.

இதன் பின் பொருளாளரினால் பொருட்கள் கையளிக்கப்பட்டு இறுதியாக செயளாலரின் நன்றி உரையுடன் முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -