அப்துல்சலாம் யாசீம்-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பெண்கள் சத்திரசிகிச்சை பிரிவு இன்று (26) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் மிகவும் குறையாக இருந்த இப்பிரிவை உடனடியாக புணரமைக்குமாறு சுகாதார அமைச்சிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து இவ்வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஷார் மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன். பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.