எம்.ரீ. ஹைதர் அலி-
ஒவ்வொரு சமூகத்திலும் அதன் பிரதான அங்கமாக அச்சமூகத்திலுள்ள இளைஞர்களே உள்ளனர். இருப்பினும் எமது பிரதேசத்தினைப் பொறுத்தவரை சமூக ரீதியான விடயங்களில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி இலாஹிஸ் விளையாட்டுக்கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.11.08ஆந்திகதி - புதன்னிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
எனவே இவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டில் மாத்திரமன்றி சமூகம் சார்ந்த விடயங்களிலும் கூடுதலான பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும்.
குறிப்பாக கல்வி, ஆன்மிகம், தலைமைத்துவம், பொருளாதாரம், சமூக நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இளைஞர்கள் சமூகம் சார்ந்த விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் செயற்படும் பட்சத்தில் சமூகத்திலுள்ள அதிகளவான ஒழுக்க ரீதியான சீர்கேடுகளும், பிரச்சனைகளும் குறைவடைவதோடு ஒரு சிறந்த ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பு ஒன்றினையும் தோற்றுவிக்க முடியும் எனவும் தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.