க.கிஷாந்தன்-
சத்திய சாயி பாபா அவர்களின் 92வது ஜனன பிரார்த்தனை அட்டன் சாயி நிலையத்தில் 25.11.2017 அன்று இடம்பெற்றது.
அத்தோடு சீரடி சாயி பாபாவின் 100 வருட சமாதி தின நிகழ்வு, கலியுகத்தின் காக்கும் கடவுளான சத்திய சாயி பாபாவின் 92வது ஜனன தின விழா, அட்டன் சாயி நிலைய 45வது ஆண்டு நிறைவு என்பவற்றை முன்னிட்டு அட்டன் சாயி நிலையத்தில் சத்திய சாயி பாபா, சீரடி சாயி பாபா, பிள்ளையார் ஆகிய மூவரினதும் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டதோடு, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இவ் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.
மேலும் சாயி பஜனை இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.





