மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் 29வது ”தமிழ் அருவி”






அஷ்ரப் ஏ சமத்-

மொ
ரட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் 29வது ”தமிழ் அருவி” 2017 நிகழ்வு நேற்று(05) வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளா் வைத்திய கலாநிதி சிவந்தராஜா, கௌரவ அதிதியாக அமைச்சா் மனோ கனேசன் கலந்து சிறப்பித்தனா். இந் நிகழ்வின் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உயா் கல்வியைத் தொடரும் பொறியியல் பீடம், தகவல் தொழில்நுட்பம், கட்டிடக் கலைஞா்கள், வியாபார முகாமைத்துவ பீடங்களில் கற்கும் 500 க்கும் மேற்பட்ட தமிழ் மாணவா்கள் கலந்து சிறப்பித்தனா். மாணவா்களது கலை நிகழ்ச்சிகள் மேடை யேற்றப்பட்டன. அத்தடன் ” மக்கள் மன்றம் விவதாத்தின்போது யாழ்ப்பாணம், பேராதெனிய, கொழும்பு ,மொரட்டுவை பல்கலைக்கழக மாணவா்கள் ” இன்னும் சிறுபான்மையினா் அரசை நம்பிப் பயணில்லை- நம்ப வேண்டாம் என்ற தலைப்பில் வாதிட்டனா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன் கூறியதாவது -

இந்த நாட்டில் சிறுபான்மையினா் என்றவா்கள் இல்லை. நாம் ஒரு தேசிய இனம் என்றே சொல்லவேண்டும். தமிழா், மலையகத்தினா், முஸ்லீம்கள் அணைவரும் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம். நாம் தந்தை செல்வா தொட்டு இன்று வரை உள்ள தலைவா்கள்வரை ஏமாந்து தான் செல்கின்றோம். தருவதை நாம் பெற்றுக் கொள்வதில்லை. காலம் செல்ல செல்ல வட கிழக்கு தனியாக பிரிக்கப்பட்டு ஒன்றை ஆட்சிக்குள் அதிகாரமே தற்பொழுது அரசியலமைப்பில் பேசப்படுகின்றது.

அன்று சகல அதிகாரங்களையும் தருவதாக வட கிழக்கு இணைப்புடன் தருவதாக சொன்னதையும் தமிழ்த் தலைவா்கள் ஏற்க ம றுத்துள்ளாா்கள். நான் ஒருபோதும் சிங்கள அரசையோ தலைமைகளை நம்புவதில்லை. நான் தன்னையே நம்புகின்றேன். நம்மீது தன்னம்பிக்கை வேண்டும். அண்மையில் நுவரேலியாவில் 4 பிரதேச சபைகளை பெற்றெடுத்தது . வெறும் அகிம்சைப் போராட்டத்தில் அல்ல, நான் அதற்காக போராடினேன், வெளிநடப்புச் செய்தேன். போராட்டம் நடத்தித்தா இச் சபைகளை பெற்றோம். சிங்கள அரசிடம் நாம் கேட்காமல் இருந்தால் தரமாட்டா்கள் நாம் சும்மா இருந்தால் இருக்கின்றதையும் பிடுங்கி எடுத்துவிடுவாா்கள். இது தான் உண்மை.

எனக்கு யாழ்ப்பாணத்தில் அல்லது மட்டக்களப்பு, மலையகத்தில் தமிழனுக்கு அடி விழும்போது கூட எனக்கு நோகின்றது. உடன் நான் அவா்களுக்காக குரல் கொடுப்பேன். அது தான் உண்மை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -