எம்.ஜே.எம்.சஜீத்-
இலங்கையின் நாலா பாகங்களிலும் உள்ள பல்வேறு துறைசார்ந்தவர்ளை தெரிவு செய்து அவர்களுக்கு தேசகீர்த்திகௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வு நேற்று(14) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
சமாதான நீதவான்களின் தெற்காசிய வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின்போது தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசகீர்த்திப் பட்டங்களைவழங்கி வைத்தார்.
அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பஹத் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யுனஸ்கோவிருது பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமானவி.ஆனந்தசங்கரிக்கு இவ்வாண்டுக்கான தெற்காசிய சமாதான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை நாட்டின் நாலா பாகங்களிலும் சமூக, சமய, கலாசார, ஊடகத்துறை, வைத்தியத்துறை, கலைத்துறைஉள்ளிட்ட பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 35 பேர் தேசகீர்த்தி பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பல்வேறு சமூக சேவைகளை கிழக்கு மாகாணம் முழுவதும் இன மத வேறுபாடுகளின்றி மேற்கொண்டுவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஸ்தாபகப் பொருளாளர் கே.துரைநாயகம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அச்சுமற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையில் பாரிய சேவையாற்றி வரும் எம்.ஏ.றமீஸ் ஆகியோர் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.
கே.துரைநாயகம்
சமூகசேவகர் பிரபல தொழிலதிபர் கே.துரைநாயகம் அவர்கள் அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளி அன்னமலைக்கிராமத்தில் கணவதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் மட்டக்களப்பு பெரியபோரதிவுக் கிராமத்தில் நிதிவதனி என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாக சுவிஸ் நாட்டில்வாழ்ந்கொண்டிருக்கிறார். இவர் தனது சொந்தப் பிரதேசமான நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்கல்வி கற்றவர்.
நாட்டில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையின் பின்னர் சுவிஸ் நாட்டில் சுவிஸ் உதயம் எனும் அமைப்பினைநிறுவி அதனுடைய ஸ்தாபக பொருளாளராக இருந்து கொண்டு இலங்கையின் கிழக்குமாகாண சுவிஸ்உதயத்தினூடாக பாதிக்கப்பட்ட உறுவுகளுக்கு உதவி வருகின்றார்.
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம், கல்வி என்வற்றை முன்னேற்றும் நோக்குடன் இவ் அமைப்பின்மூலம் தனது சேவைகளை இன்றுவரை தொடர்ந்து வருகின்றார்.
அத்தோடு சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தன்னுடைய தனிப்பட்டசெலவில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். தன்னுடைய பெருந்தொகை நிதியினைக் கொண்டுகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்துஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்புக்களையும் மாலை நேர வகுப்புக்களையும்நடத்தி வருகின்றார். அதுமாத்திரமல்லாமல் பாரிய நோய்களால் பாதிக்கப்பட்டு அல்லல் பட்டு வரும் நோயாளர்களின்நலன் கருதி மருத்துவ சிகிச்சைகளுக்காக பெருந் தொகைப் பணத்தினையும் இவர் செலவிட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
எம்.ஏ.றமீஸ்
அட்டாளைச்சேனைஐச் சேர்ந்த இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர் சம்மேளனத்தின் இருபதாவதுவருட நிறைவு விழாவில் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழையமாணவரும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் தற்போதைய ஆங்கில ஆசிரியராகவும் இவர் சேவையாற்றிவருகின்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தின் பிறை எம்.எம்.வானொலி சேவையின் அறிவிப்பாளரும், அரச சார்பற்றநிறுவனமொன்றின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான இவர் ஊடகத்துறையில்17வருட காலமாக இணைந்து சேவையாற்றி வருகின்றார்.
கடந்த 1999 காலப்பகுதியில் நவமணி பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்த இவர் 2000 ஆண்டு காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையின் அட்டாளைச்சேனை செய்தியாளராக தினசரிப் பத்திரிகையினுள்பிரவேசம் பெற்றார்.
தற்போது வீரகேசரிப் பத்திரிகையின் தீகவாபி நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் அட்டாளைச்சேனைநிருபராகவும், விடிவெள்ளி பத்திரிகையின் அக்கரைப்பற்று பிரதேச நிருபராகவும், மெற்றோ நியுஸ், நவமணி உள்ளிட்டபத்திரிகைகள் சிலவற்றுக்கும் இணையத்தள செய்தி சேவைகளுக்கும் எம்.ஏ.றமீஸ் என்ற பெயரில் எழுதி வருகின்றார்.
ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட இவர்; இணையத்தள சேவையொன்றின் செய்திமுகாமையாளராக செயற்பட்டு வருகின்றார்.
ஊடகவியலாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் வெகுசன ஊடக அமைச்சினால்நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசி தசி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனையைச்சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடமிருந்து புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கியவிழாவினையொட்டி கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கிடையே நடத்தப்பட்டபடைப்பாக்கப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்பித்து வரும் இவர் புகைப்படக் கலைஞர்போட்டியில் பங்கு கொண்டு மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார்.
இது தவிர, இவ்வாண்டுக்கான மாகாண மட்ட அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான புதுக்கவிதைப் போட்டியில்பங்கு கொண்டு மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளார்.
மொறட்டுவைப் பல்கலைக் கழகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து அதிகார சபை ஆகியன நாடுதழுவிய ரீதியில் நடத்திய கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் தேசிய ரீதியில் முதல் நிலை பெற்றுள்ளதோடுபல்வேறு பாராட்டுப் பரிசில்களையும் பெற்றுள்ளார்.
பாடசாலைக் காலம் முதல் தற்போது வரை பல்வேறு பட்ட துறைகளில் பிரகாசித்து வரும் இளம் கவிஞரான இவர் பலதேசிய மட்ட விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில்பல்துறைப் போட்டிகளில் பங்கு கொண்டு பல்வேறான வெற்றிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.