க.கிஷாந்தன்-
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து 15.10.2017 அன்று காலை 11 மணியளவில் சிசுவின் சடலம் ஒன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நாய் ஒன்று சிசுவை கவிக்கொண்டு செல்லும் பொழுது, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அதனை கண்டுள்ளார்.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.