ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நியமனம்



எம்.ரீ. ஹைதர் அலி-
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,  நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி ரவூப் ஹக்கீமினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2017.10.15ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை இன்று காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சி முக்கியஸ்தர்களுடனான இக்கலந்துரையாடலின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,  நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான  கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி ரவூப் ஹக்கீம்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். நஸீர் அஹமட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அல்ஹாஜ். அலிசாஹிர் மொலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. அல்ஹாஜ். யு.எல்.எம்.என். முபீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -