



மு.முகம்மட் ஸாஜித்-
ஏறாவூர் நூறுஸ்ஸலாம் காட்டுப்பள்ளி வாயல் மையவாடியில் இரவு நேரத்தில் ஜனாஸாக்களை அடக்குவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது.
இக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏறாவூரில் பல மனித நேயப் பணிகளை செய்து வருகின்ற மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள் அமைப்பினால் நான்கு இலட்சத்து இருபதினாயிரம் செலவில் மையவாடியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. அனைத்து வேலைகளும் அவர்களின் கரங்களினாலே செய்து முடிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
எனவே இவ்வாறான மகத்தான பணிகளை செய்து வரும் மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் அஹமத் மற்றும் உபதலைவர் அன்வர் அலி மற்றும் இதற்காக நிதி உதவிகளை வழங்கிய பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
இஷா தொழுகையின் பின் நடந்த இன் நிகழ்வு Al Hajj M.L.Abdul Lathif தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.