

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் 09 வயது சிறுமியை தாக்கியதுடன் எட்டாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு இன்று (15) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி சித்ரவேல் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே இடத்தைச்சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை மது போதையில் தனது 09 வயது சிறுமியை பொல்லால் தாக்கி காயப்படுத்தியதுடன் , கடந்த வாரம் எட்டாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நபர் தொடர்பில் வாரத்திற்கு மூன்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.